மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்கா; ரோஜா பூங்காக்களில், பல வண்ண மலர்களால் வன விலங்குகள்; மலை ரயிலை உருவாக்கும் பணி நடந்து வருகிறது.ஊட்டி தாவரவியல் பூங்காவில் வரும், 10ம் தேதி, 126வது மலர் கண்காட்சி துவங்குகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கிறது. அதே போல, ரோஜா கண்காட்சி, 10ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது. மலர் கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக, பெரியவர்களுக்கு, 150, சிறுவர்களுக்கு, 75 ரூபாய் நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தாவரவியல் பூங்காவில், 250 வகைகளில், 10 லட்சம் மலர் பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன. கடந்த சில நாட்களாக, மழை பெய்து வரும் நிலையில், வெப்பம் சற்று தணிந்து இதமான காலநிலை நிலவுகிறது.இதனால், கேரளா மற்றும் கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் மாநிலத்தின் சமவெளி பகுதிகளில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.இந்நிலையில், மலர்கண்காட்சி நாட்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக, பாரம்பரிய மிக்க, 'ஊட்டி மலை ரயில்' பல்லாயிரக்கணக்கான மலர்களால் உருவாக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.இதே போல, ரோஜா பூங்காவில், மலர்களால் யானை, புலி, காட்டெருமை உட்பட பல்வேறு கண்கவர் அலங்காரங்களையும், இடம் பெற செய்ய பூங்கா நிர்வாகம் முடிவெடுத்து, பணியை துரிதப்படுத்தியுள்ளது.
03-Oct-2025