உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானைகள் கணக்கெடுப்பு பணி இரண்டாம் நாள் களத்தில் வன குழுவினர்

யானைகள் கணக்கெடுப்பு பணி இரண்டாம் நாள் களத்தில் வன குழுவினர்

பந்தலுார், - தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய அளவிலான, ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.தமிழக வனக்கோட்டங்களில் ஆண்டிற்கு ஒரு முறை ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மேற்பார்வையில், கூடலுார் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட, ஓவேலி, ஜீன்பூல், தேவாலா, சேரம்பாடி, பிதர்காடு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.இரண்டாம் நாளில், 'தொகுதி எண்ணிக்கை முறை, நேர்கோட்டு பாதை முறை, நீர் நிலைகளில் எண்ணிக்கை முறை, மொத்த தொகுதிகள், மொத்த நேர்கோட்டு பாதைகள், மொத்த நீர்நிலைகள்,' என, ஒவ்வொரு குழுவினரும், 15 கி.மீ., சுற்றளவில் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். யானைகளின் கால்தடம் மற்றும் எச்சங்கள், வனப்பகுதிகள் மற்றும் தோட்ட பகுதிகளில் முகாமிடும் யானைகள் குறித்தும் கணக்கெடுக்கப்படுகிறது. ஜி.பி.எஸ்., உதவியுடன் இவை பதிவு செய்யப்படுகிறது. பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக பகுதியில், வனச்சரகர் ரவி தலைமையில் இப்பணி நடந்தது. அதில், 150 வனப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் இந்த கணக்கெடுப்பு மூலம் யானைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அவற்றின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள ஏதுவாக அமையும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ