உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குப்பை அகற்றும் பிரச்னை; கவுன்சிலர்கள் வாக்குவாதம்

குப்பை அகற்றும் பிரச்னை; கவுன்சிலர்கள் வாக்குவாதம்

கூடலுார் : கூடலுார் நகர மன்ற கூட்டம், தலைவர் பரிமளா தலைமையில் நேற்று நடந்தது. சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.கவுன்சிலர் உஸ்மான்: நகரில் நாள்தோறும், 17 டன் குப்பை அகற்றப்படுவதாக கூறுகின்றனர். அதற்கான வாய்ப்பு இல்லை. ஒப்பந்ததாரர் விதி மீறி செயல்படுவதால், குப்பை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட ஒப்பந்ததை ரத்து செய்ய வேண்டும்.சுகாதார ஆய்வாளர்: அதிகாரியிடம் பேசி முடிவு செய்யப்படும்.துணைத் தலைவர் சிவராஜ்: இப்பிரச்னையை தொடர்ந்து பேசுகின்றனர். அனைவரும் ஒத்துழைத்து கையெழுதிட்டு, தீர்மானம் கொண்டு வர வேண்டும்.இளங்கோ: நகரில் அகற்றப்படும் குப்பையின் எடையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.அனுப்கான்: இது தொடர்பாக ஆய்வு செய்ய தலைவர் அமைத்த கமிட்டி, தெரிவித்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவர்: ஆதாரம் கொடுக்க வேண்டும்.சத்தியசீலன்: ஆதாரம் உள்ளது. நெல்லியாளம் நகராட்சியின் குப்பையை இங்கு எடுத்து வருகின்றனர்.ராஜேந்திரன்: விசாரணை செய்யும்போது ஆதாரம் தரப்படும். எனவே முதல் கட்டமாக ஒப்பந்தம் ரத்து செய்யும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.வென்னிலா: ஆணையாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கும் போது மன்ற கூட்டம் நடத்த வேண்டும். தொடர்ந்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் சிவராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Madhan Maths
அக் 20, 2024 08:38

சார்..இன்று oct 20 ரஜினியை பற்றி ஒரு கட்டுரை படித்தேன். அவர் சரியாக தான் நடிக்கிறார். மேலும் அவர் ஒல்லியாக இருப்பதால் அவர் ஸ்டைல் இன்னும் நன்றாக தான் உள்ளது. ரஜினி ரசிகன் என்ற பெயரில் ஒரு ஓநாய் எழுதிய கட்டுரையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தயவு செய்து ரஜினியின் உண்மையான ரசிகர் மனதை இப்படி புன்படுதாதீர்கள். அவர் எங்களுக்காக நடிக்கிறார். மேலும் அனைவரையும் நடிப்பில் மகிழ் விக்கிரார். ரஜினிக்கு தெரியும் எப்படி நடிக்க வேண்டும் என்று யாரும் புத்தி சொல்ல தேவை இல்லை.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை