உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தாம்பட்டியில் சிதறி கிடக்கும் குப்பை கழிவு பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்

தாம்பட்டியில் சிதறி கிடக்கும் குப்பை கழிவு பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்

ஊட்டி;தாம்பட்டி கிராமத்தில் மையப்பகுதியில் தேங்கி சிதறி கிடக்கும் குப்பை கழிவால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தாம்பட்டி கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பேரூராட்சி ஊழியர்கள் மட்கும் குப்பை, மட்காத குப்பைகளை வீடு, வீடாக சென்று தரம் பிரித்து வாங்கி திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு கொண்டு செல்கின்றனர். சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் கிராமங்கள் தோறும் குப்பை தொட்டிகளை அகற்றி, குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று சேகரித்து வருகின்றனர். ஆனால், தாம்பட்டி கிராமத்தின் மைய பகுதியில் உடைந்த குப்பை தொட்டியை பேரூராட்சி நிர்வாக அகற்றாமல் விட்டுள்ளனர். கிராம மக்கள் அந்த தொட்டியில் குப்பை கழிவுகளை கொட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பேரூராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.அங்கு சிதறி கிடக்கும் குப்பையால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தவிர, இரவில் கரடிகள் குப்பைகளை கிளறி வருவதால் கரடி நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குப்பை தொட்டியை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயத்தில் குப்பைகளை கொட்டுவதை அப்பகுதி மக்கள் தவிர்க்க வேண்டும். சுகாதாரத்தை காக்க பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை