உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுார் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

கூடலுார் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

கூடலுார்:கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளநிலை முதலாம் ஆண்டு பாடப்பிரிவுகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று துவங்குகிறது.கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நடப்பு கல்வி ஆண்டு இளநிலை முதலாம் ஆண்டு பாடப்பிரிவுகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் இனசுழற்சி முறையில் துவங்குகிறது. இன்று சிறப்பு ஒதுக்கீட்டில் விளையாட்டு, தேசிய மாணவர் படை, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், அந்தமான் நிக்கோபார் தமிழ் வம்சாவழியினர், பாதுகாப்பு படையினருக்கு கலந்தாய்வு நடக்கிறது. தொடர்ந்து, அடுத்த மாதம், 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு; 24 முதல் 29 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு தொடர்பாக மாணவர்கள் வர வேண்டிய தேதி குறித்த விபரம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்படும். அந்த தேதியில் மாணவர்கள் கலந்தாய்வு சேர்க்கைக்கு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை