உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இயற்கை பாதுகாப்பின் முக்கியத்துவம்: பழங்குடி மாணவர்களுக்கு பயிற்சி

இயற்கை பாதுகாப்பின் முக்கியத்துவம்: பழங்குடி மாணவர்களுக்கு பயிற்சி

கூடலுார்:கூடலுார், ஜீன்பூல் தாவர மையத்தில் நடந்த பயிற்சி முகாமில், இயற்கையை பாதுகாப்பதின் முக்கியத்துவம் குறித்து ஏழுமுறம் பழங்குடி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.கூடலுார் ஏழுமுறம் பழங்குடி கிராமத்தில்,'ஆல் த சில்ட்ரன்' அமைப்பின் மூலம், பழங்குடி மாணவர்களுக்கான மாலை நேர பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 35 பழங்குடி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. தற்போது, இவர்களுக்கு, படம் வரைதல் பேச்சுத்திறன், தற்காப்பு கலையான சிலம்பு பயிற்சி வழங்கி வருகின்றனர்.பழங்குடி மாணவர்கள் இயற்கை பாதுகாப்பு மற்றும் மூலிகை, செடிகள் தாவரங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்துக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர்.அங்கு, நடந்த பயிற்சியில் இயற்கை வனங்களை பாதுகாப்பு, மூலிகை செடிகள், நீர்தாவரங்கள், நன்னீர் மீன்கள் முக்கியத்துவம் அதன் பாதுகாப்புடன் அவசியம் குறித்து, கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியன், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஜித், மாலை நேர பள்ளி ஆசிரியர் பிரியங்கா ஆகியோர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ