உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொழிற்சாலைகளில் இலை கொள்முதல் உயர்வு: தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

தொழிற்சாலைகளில் இலை கொள்முதல் உயர்வு: தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

மஞ்சூர்;மஞ்சூர் பகுதி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் நாள்தோறும், 15 ஆயிரம் கிலோ இலை கொள்முதல் செய்யப்படுகிறது.மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சூர், கிண்ணக்கொரை, பிக்கட்டி, எடக்காடு, மேற்குநாடு, இத்தலார் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. 12 ஆயிரம் பேர் அங்கத்தினர்களாக இருந்து கொண்டு தங்களது தோட்டத்தில் அறுவடையாகும் பசுந்தேயிலையை வினியோகித்து வருகின்றனர். தொடரும் மழையால், மஞ்சூரில் சில பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் நல்ல சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களில் இலைகள் அறுவடைக்கு தயாராகியுள்ளது. இப்பகுதிகளில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் நாள்தோறும் சராசரியாக, 10 ஆயிரம் கிலோ இலை கொள்முதல் செய்யபட்ட நிலையில், மழைக்கு பின் தற்போது, 15 ஆயிரம் கிலோ வரை இலை கொள்முதல் அதிகரித்துள்ளது. மூன்று 'ஷிப்ட்' அடிப்படையில் தேயிலை உற்பத்தி நடந்து வருகிறது. ஆனால், சில பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் விவசாயிகள் உரமிட்டு தேயிலை தோட்டங்களை பராமரிக்க அச்சமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை