மாவட்ட அளவிலான தடகள போட்டிக்கு அழைப்பு
ஊட்டி : மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜேந்திரன் அறிக்கை: நீலகிரி மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் ஆக., 21 ம் தேதி ஊட்டியில் உள்ள எச்.ஏ.டி.பி., திறந்தவெளி விளையாட்டு அரங்கில் நடக்கிறது. அதில், 14,16,18,20 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம். இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் வீரர்கள், செப்., மாதம் ஈரோட்டில் நடக்கும் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டியில் பங்கேற்க வேண்டும். மேலும், டிச., மாதம் ஒடிசாவில் நடைபெறவுள்ள அகில இந்திய அனைத்து மாவட்டங்களுக்கு இடையேயான ஜூனியர் தடகள போட்டிகளில் பங்கேற்க முடியும்.விருப்பம் உள்ள தடகள வீரர்கள், 94430 66112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.