உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானை வாழ்விட பகுதியில் வெட்டப்படும் பலா மரங்கள்

யானை வாழ்விட பகுதியில் வெட்டப்படும் பலா மரங்கள்

குன்னுார்; குன்னுார் கே.என்.ஆர்., அருகே இரவு பகலாக, பலா உட்பட காட்டு மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.இப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகையில்,'இப்பகுதியில் பலா, நகா, வெண் தேக்கு உட்பட காட்டு மரங்கள் வெட்டி, 11 லாரிகளில் இதுவரை கொண்டு செல்லப்பட்டுள்ளன. சமீப காலமாக மேட்டுப்பாளையம் மலை பாதையோர இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இங்கு, அனுமதி வாங்கி மரங்கள் வெட்டப்பட்டதாக கூறப்பட்டாலும், கூடுதல் மரங்களை வெட்டி செல்ல வாய்ப்புள்ளது. இதனால், வன அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்,' என்றனர்.குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில்,''அங்குள்ள பட்டா இடத்தில், 80 பலா மரங்கள் வெட்ட அனுமதி கேட்கப்பட்டது. அதில், 27 முதிர்ச்சியடைந்த பலா மரங்கள், என கலெக்டரிடம் இரு அனுமதிகள் பெறப்பட்டு வெட்டப்படுகிறது. மற்ற மரங்கள் வெட்டப்படுவதில்லை. அப்பகுதியில் மீண்டும் பலா நாற்றுக்கள் நடவு செய்வதாகவும் கூறியுள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி