உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரி -சாலையில் விழுந்த மரம் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி -சாலையில் விழுந்த மரம் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி;கோத்தகிரி- ஊட்டி இடையே, கார்ஸ்வுட் பகுதியில், ராட்சச மரம் விழுந்து இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக, சாரல் மழையுடன் அவ்வப்போது, காற்று வீசி வருகிறது. ஏற்கனவே நிலம் ஈரும் கண்டுள்ள நிலையில், சாலையோரங்களில் உள்ள மரங்கள் விழுந்து வருகின்றன. இந்நிலையில். நேற்று காலை கோத்தகிரி- ஊட்டி இடையே கார்ஸ்வுட் பகுதியில், சாலை ஓரத்தில் போதிய வேர்ப்பிடிப்பு இல்லாத, பெரிய சீகை மரம் சாலையில் விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த கோத்திகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் 'ஹைவே பெட்ரால்' போலீசார் உட்பட, பொதுமக்கள் உதவியுடன் மரம் வெட்டி அகற்றினர். பகல், ஒரு மணிக்கு மரம் முழுவதுமாக அகற்றப்பட்டதை அடுத்து போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ