உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளி வளாகத்தில் துாய்மை பணி கைகோர்த்த பெற்றோருக்கு பாராட்டு

பள்ளி வளாகத்தில் துாய்மை பணி கைகோர்த்த பெற்றோருக்கு பாராட்டு

பந்தலூர்;பந்தலுார் அருகே பள்ளி வளாகத்தை துாய்மை செய்யும் பணியில் பெற்றோர் ஈடுபட்டனர். கோடை விடுமுறைக்கு பின்னர் வரும்,10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கு முன்னர், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், படிக்கும் மாணவர்கள் தன் சுத்தம், பள்ளி வளாக துாய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஊக்கமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன்னோட்டமாக, 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை, பள்ளி துாய்மை பணி செயல்பாடுகள் மேற்கொள்ள, மாநில கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்நிலையில், பந்தலுார் அருகே, பாட்டவயல், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் பூபதி தலைமையில், பி.டி.ஏ., தலைவர் ஸ்ரீஜேஸ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்திரா, வார்டு உறுப்பினர்கள் அஷ்ரப், அனீஸ் ஆகியோர் முன்னிலையில் பெற்றோர் இணைந்து, பள்ளி வளாகத்தை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதில், பள்ளி வளாகம் முழுவதும், புதர்கள் அகற்றப்பட்டு துாய்மைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வகுப்பறைகளை தண்ணீர் ஊற்றி கழுவி, மாணவர்களின் இருக்கைகள் துாய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாணவர்கள்; கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை