உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் தேயிலை ஏலம்; சராசரி விலை உயர்வு

குன்னுார் தேயிலை ஏலம்; சராசரி விலை உயர்வு

குன்னுார் : தென்மாநில தேயிலை ஏலங்களில் சராசரி விலை உயர்ந்து வருகிறது.குன்னுார் ஏல மையம்,டீசர்வ், கோவை, கொச்சி ஏல மையங்களில் வாரம் தோறும் தேயிலை தூள் ஏலம் விடப்படுகிறது.கடந்த, 33வது ஏலத்தில் இதுவரை இல்லாத அளவு அனைத்து ஏலங்களிலும், சராசரி விலை கிலோ, 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகியது.'கொச்சியில்,159.06 ரூபாய்; கோவையில், 123.33; குன்னுாரில், 114 .35; டீசர்வில். 101.88 ரூபாய்,' என, சராசரி விலை இருந்தது.இதே போல, தேயிலை துாள் வரத்து அதிகரித்த நிலையில் விற்பனையும், 96 சதவீதத்திற்கு மேல் இருந்தன. கொச்சி மற்றும் டீசர்வ் மையங்களில் சி.டி.சி., இலை ரகம், 100 சதவீதம் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ