மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
14 hour(s) ago
கூடலுார்:கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஆகாஷ பாலம் அருகே மண் சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கூடலுாரில் தொடரும் மழையால் சாலைகளில் அவ்வப்போது மரங்கள் சாய்ந்தும், மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடுவட்டம் ஆகாஷ பாலம் அருகே, நேற்று மாலை, 4:00 மணிக்கு மண் சரிவு ஏற்பட்டது. அப்பகுதியை சிறிய வாகனங்கள் கடந்து சென்றாலும், பஸ் மற்றும் கனரகவாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதவி பொறியாளர் பிரேம்குமார் மற்றும் ஊழியர்கள், பொக்லைன் உதவியுடன் மண்ணை அகற்றி, 4:45 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர்.
14 hour(s) ago