மேலும் செய்திகள்
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி பால்காரர் பலி
17-Feb-2025
கூடலுார்; கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, டி.ஆர்., பஜார் அருகே, லாரி- -இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். கூடலுாரில் உள்ள, தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று காலை, 11:30 மணிக்கு எரிபொருளை இறக்கிவிட்டு டாங்கர் லாரி, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக கோவை நோக்கி சென்றது. அதே போன்று, ஊட்டியை சேர்ந்த இருவர், நேற்று காலை இருசக்கர வாகனத்தில் கூடலுார் நோக்கி வந்துள்ளனர்.அப்போது, டி.ஆர்., பஜார் அருகே லாரி-இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த, ஊட்டியை சேர்ந்த மித்ரன்,18, உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் காயமடைந்தார். காயமடைந்த அவர் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து நடுவட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
17-Feb-2025