உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேசிய நெடுஞ்சாலையில் ஹாயாக நடந்து சென்ற மக்னா யானை

தேசிய நெடுஞ்சாலையில் ஹாயாக நடந்து சென்ற மக்னா யானை

கூடலுார்;கூடலுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 'ஹாயாக' நடந்த செல்லும் 'மக்னா' யானையால் வியாபாரிகள், ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.முதுமலையிலிருந்து பல காட்டு யானைகள் இரவில் அகழியை கடந்து தொரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன.இந்நிலையில், இரவு முதுமலையிலிருந்து தொரப்பள்ளிக்குள் அடிக்கடி வரும் மக்னா யானை, மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதால் வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்தனர்.வியாபாரிகள் கூறுகையில், 'முதுமலையிலிருந்து, இரவில் இப்பகுதிக்கு நுழையும் யானை, அடுத்த நாள் காலையில் தேசிய நெடுஞ்சாலை வழியாக முதுமலைக்கு செல்கிறது. வனத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை