மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
6 hour(s) ago
குன்னுார்:குன்னுார் பகுதிகளில் மலபார் ஜெயின்ட் ஸ்குரில் எனும் மலபார் மலை அணில்கள் உள்ளன. பர்லியார், முதுமலை உள்ளிட்ட மித வெப்ப மண்டல காடுகளில் காணப்படும் இந்த வகை, அணில்கள் காலநிலை மாற்றத்தால், குன்னுார் ஊட்டி பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளன. மிகவும் அச்சப்பட கூடிய இவை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவதில்லை.அதே நேரத்தில், சிம்ஸ்பூங்கா அருகே, நசீமா பேகம் என்பவரின் நடைபாதை பழக்கடைக்கு பல ஆண்டுகளாக மலபார் ஜெயின்ட் ஸ்குரில் ஒன்று தினமும் வந்து, சீத்தாபழம், பட்டர் புரூட் வாங்கி ருசித்து செல்கிறது.இந்நிலையில், இதன் அருகில் உள்ள முத்துலட்சுமி என்பவரின் பழக்கடைக்கு குடும்பமாக, மலபார் ஜெயின்ட் ஸ்குரில்கள் வந்து பழங்களை வாங்கி உட்கொண்டு செல்கிறது. இங்கு குடும்பமாக வசித்து வந்த நிலையில், ஆண் மலபார் ஸ்குரில் சமீபத்தில் வாகனத்தில் அடிபட்டு இறந்தது. தற்போது ஒரு பெண் மலபார் ஸ்குரில் மற்றும் இதன் இரு குட்டிகள் வந்து செல்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு வியப்படைந்து செல்கின்றனர்.
6 hour(s) ago