| ADDED : ஜூன் 12, 2024 10:29 PM
பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையத்தில் 'ஆன்லைன்' சூதாட்டத்தில் பணம் இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார்,37. தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார். மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கவுண்டம்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், முத்துக்குமார் 'ஆன்லைன்' சூதாட்டத்தில் ஈடுபட, பலரிடம் கடன் பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததும் தெரிய வந்தது.இது தொடர்பான கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு தொகை இழந்தார் என, தெரியவில்லை. கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.