மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
குன்னுார், - குன்னுார் சிம்ஸ் பூங்காவில் அமைக்கப்பட்ட, தோட்டக்கலை துறை அரங்குகளில் அமைக்கப்பட்ட வடிவமைப்புகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.குன்னுார் சிம்ஸ் பூங்காவில் துவங்கிய, 64வது பழக்கண்காட்சியில், மாநிலத்தில் உள்ள, 10 மாவட்டங்களில் தோட்டக்கலை துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.அதில், கன்னியாகுமரி மாவட்டத்தின் தேனீ, கிருஷ்ணகிரியின் புஜ்ஜி, தஞ்சாவூரின் தலையாட்டி பொம்மை, நாமக்கல் மாவட்டத்தின் டிராகன், கரூரின் அன்னப்பறவை, கடலுாரின் கலங்கரை விளக்கம், மதுரையின் மரவன் பட்டாம்பூச்சி, திருச்சியின் பாண்டா, பெரம்பலூரின் இந்தியா கேட் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சர்வதேச ஒட்டகம் ஆண்டு
2024ம் ஆண்டு சர்வதேச ஒட்டகங்களின் ஆண்டாக ஐநா சபை அறிவித்துள்ளது. கோவை தோட்டக்கலை துறை சார்பில், முலாம்பழம் மற்றும் சப்போட்டா பழங்கள் கொண்டு ஒட்டகம் வடிவமைக்கப்பட்டது. இவை அனைத்தும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025