உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் வசந்தம் நகரில் வாகனம் மோதி சேதமான நகராட்சியின் சுவர்,கேட்

குன்னுார் வசந்தம் நகரில் வாகனம் மோதி சேதமான நகராட்சியின் சுவர்,கேட்

குன்னுார்:குன்னுார் வசந்தம் நகர் மற்றும் குப்பை குழி, மறு சுழற்சி மையம் செல்லும் பகுதியில் உள்ள நகராட்சி கேட் மற்றும் சுவர் வாகனம் மோதி சேதமானது.குன்னுார் நகராட்சிக்கு சொந்தமான வசந்தம் நகர் பகுதியில் குப்பை குழி நுழைவாயிலில் நகராட்சி சார்பில் சுவர், கேட் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் இருந்த சுவர், கேட் வாகனம் மூலம் இடிக்கப்பட்டுள்ளது. இங்கு 'சிசிடிவி' கேமராக்கள் இருந்தும், சம்பந்தப்பட்ட நபரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர். மக்கள் கூறுகையில்,'சேதமான சுவர், கேட் அமைக்க நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கும் பட்சத்தில் மக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை உள்ளது. எனவே, இந்த சம்பவத்துக்கு காரணமான நபர் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை