உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாநில எல்லையில் நக்சல் நடமாட்டம்: மூன்று மாநில போலீசார் கண்காணிப்பு

மாநில எல்லையில் நக்சல் நடமாட்டம்: மூன்று மாநில போலீசார் கண்காணிப்பு

பந்தலுார்;தமிழக- கர்நாடக எல்லையில் நக்சல் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலை அடுத்து, மூன்று மாநில போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பந்தலுார் அருகே உள்ள கேரளா மாநிலம் வயநாடு பகுதியில், கடந்த சில மாதங்களாக நச்சல்கள் முகாமிட்டு வருகின்றனர். அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் நடந்து வரும் நிலையில், இரண்டு நக்சல்களை போலீசார் பிடித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், தமிழக- கேரளா மாநில எல்லையை ஒட்டிய கர்நாடகா மாநிலம் தக்சின கன்னடா அருகே, சுப்ரமணிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இனிக்கீடு கிராமத்தில் அசோக் கவுடா என்பவரின் வீட்டிற்கு, நேற்று முன்தினம் நான்கு நக்சல்கள் துப்பாக்கிகளுடன் வந்துள்ளனர்.அங்கு சுமார் ஒரு மணி நேரம் இருந்த நக்சல்கள் அரிசி மற்றும் உணவு பொருட்களை வாங்கி கொண்டு, அருகில் உள்ள வனப்பகுதி வழியாக சென்றுள்ளனர். தகவல் அறிந்த கர்நாடகா போலீசார், அங்கு சென்று, விவசாயி அசோக் கவுடாவிடம், நக்சல்களின் போட்டேக்களை காட்டி விசாரித்துள்ளனர். அதில், அங்கு வந்தது நக்சல் தலைவர் விக்ரம் கவுடா தலைமையில், ஜிசா, ரவி, லதா, சந்தோஷ் உள்ளிட்டோர் வந்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, தமிழக, கேரளா அதிரடிப்படை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மூன்று மாநில அதிரடிப்படை போலீசார் மாநில எல்லை பகுதிகளில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ