மேலும் செய்திகள்
பஜாருக்குள் நுழைந்த யானையால் பரபரப்பு
1 hour(s) ago
இடிந்து விழுந்த அரசு பள்ளி கழிப்பிட சுவரால் அதிர்ச்சி
1 hour(s) ago
அபாய மரங்களால் கல்லுாரி மாணவர்கள் அச்சம்
2 hour(s) ago
பந்தலுார்:பந்தலுார்அருகே நெல்லியாளம் நகராட்சி, 7-வது வார்டில் எம்.ஜி.ஆர்., நகர் அமைந்துள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. அதில், ஒரு பகுதியில் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்தும், அதனை சீரமைக்க பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்திய நிலையில், நகராட்சி நிர்வாகம் கால்வாய் அமைக்காமல் அலட்சியம் கட்டி வருகிறது. இதனால், கழிவுநீர் தேங்கி நின்று, பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும் குடிநீர் கிணற்றில் கழிவு நீர் கலந்து நோய் பாதிப்பு ஏற்படுவதுடன், நடைபாதை சேதமடைந்ததால் வாகனம் வந்து செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடிகள் கட்டி, ஓட்டு கேட்டு வர எதிர்ப்பு தெரிவித்து பேனர் வைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் பொதுமக்களிடம் பேசுகையில், 'அதிகாரிகளிடம் பேசி தீர்வு ஏற்படுத்தி தரப்படும்,' என உறுதி அளித்தார்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago