மேலும் செய்திகள்
பவுஞ்சூர் பஜாரில் சுகாதார வளாகம் அமையுமா?
04-Aug-2024
கோத்தகிரி : கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில், கழிப்பிடம் வசதி இல்லாததால், மக்கள் பொது இடங்களை கழிப்பிடமாக, பயன்படுத்தி வருகின்றனர்.ஊட்டி-கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள கட்டப்பட்டு பஜார், நடுஹட்டி கக்குச்சி மற்றும் ஜெகதளா ஊராட்சிகளின் எல்லையில் அமைந்துள்ளன.கிராமப்புறங்களில் இருந்து, நகர பகுதிக்கு கட்டபெட்டு பஜாரை கடந்துதான் சென்று வர வேண்டும். அன்றாட தேவைகளுக்காக, பஜாருக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், அரசு பஸ்கள், இவ்வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. கோடை சீசன் உட்பட, சாதாரண நாட்களிலும் கூட, சுற்றுலா பயணிகளில் வருகை அதிகரித்து வருகிறது.குடியிருப்புகள், கடைகள், தனியார் கிளினிக்குகள், வங்கிகள், தபால் அலுவலகம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகம் அமைந்துள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, இங்கு பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தவில்லை.இதனால் மக்கள், குறிப்பாக, பெண்கள் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், பஜார் பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டபெட்டு பஜார் பகுதியில், போதிய தண்ணீர் வசதியுடன், கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
04-Aug-2024