உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி நாராயண குரு குலம் 101வது குரு பூஜை

ஊட்டி நாராயண குரு குலம் 101வது குரு பூஜை

ஊட்டி:ஊட்டி பர்ன்ஹில் நாராயண குருகுலத்தில், 101வது குரு பூஜையை முன்னிட்டு, தத்வார்த்த நிகழ்ச்சி துவங்கியது.மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வின் முதல் நாள் நிகழ்ச்சியில், சுவாமி தியாகீஸ்வரன் தலைமையில், குரு கற்பித்த கோட்பாடுகள் குறித்து, தமிழ் மணி எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது.நடராஜகுரு, நித்தியசைதன்ய யதி மற்றும் பிரகதாருண்ய உபநிஷத் குறித்து பலரும் பேசினர். இதனை, குருகுல நிர்வாகிகள் பிரிகைட், வியாச பிரசாத், கீதா காயத்திரி ஆகியோர், 'ஜாதி, மதம், தேசியம், ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், முழுமையான பிரம்மவித்ய குறித்த கல்வி வேண்டும்,' என, வலியுறுத்தினர்.மேலும், குழந்தை முதல் முதுமை வரை, வாழ்வின் அடிப்படை நோக்க கல்வி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பகல், 2:00 மணிக்கு பகவத் சைதன்யா கர்நாடக இசை கச்சேரி நடந்தது.இதில், 50க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், ஆன்மிக சாதகர்கள் பங்கேற்றனர். முனைவர் சுகிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை குரு குல நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை