உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நமது நிலம் நமது எதிர்காலம்; சுவரொட்டி வெளியீடு

நமது நிலம் நமது எதிர்காலம்; சுவரொட்டி வெளியீடு

கூடலுார் : கூடலுாரில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 'நமது நிலம் நமது எதிர்காலம்,' சுவரொட்டி வெளியிடப்பட்டது.கூடலுார் சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம், கூடலுார் வேலி ரோட்டரி கிளப் சார்பில், சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., செந்தில்குமார், 'நமது நிலம் நமது எதிர்காலம்' என்ற சுவரொட்டி வெளியிட்டார். அதனை ரோட் சீட் கிளப் தலைவர் ஜான்சன் பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து, ஆர்.டி.ஓ., விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்து கோசங்கள் எழுப்பப்பட்டது. சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேல், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராபர்ட், தோட்ட தொழிலாளர் தொழில் பயிற்சி மைய மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ