உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கடை, வீடுகளின் கதவை உடைக்கும் கரடியால் பீதி

கடை, வீடுகளின் கதவை உடைக்கும் கரடியால் பீதி

குன்னுார் : நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற வனப்பகுதிகளில் போதிய உணவு கிடைக்காமல், உணவுதேடி குடியிருப்பு பகுதிகளுக்கு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் மட்டுமே வந்த கரடிகள், தற்போது பகல் நேரங்களிலும் உலா வர துவங்கியுள்ளன. கரோலினா பகுதியில் மூன்று கரடிகள் முகாமிட்டு, மக்களை அச்சுறுத்தி வருகின்றன.நேற்று நள்ளிரவில், கரோலினா கிராமத்திற்குள் கரடி ஒன்று நுழைந்து, வீடுகளின் கதவுகளை உடைக்க முயற்சி செய்தது; ரோசி என்பவரின் கடையை உடைத்து உள்ளே சென்றது. வீட்டில் இருந்தவர்கள் சப்தம் எழுப்பியதால் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. வனத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டும் பயனில்லை.சமூக ஆர்வலர் உஷா கூறுகையில், “இரவில் வீட்டின் கதவுகளை கரடி உடைப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரும் இல்லாத வீடுகளில் மட்டுமே கதவை உடைத்து வந்த கரடிகள், தற்போது வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே கதவுகளை உடைக்கின்றன. ''பகலில் உலா வருவதால், பள்ளி மாணவ - மாணவியர் அச்சத்துடன் செல்கின்றனர். தனியாக யாரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத்துறையினர் கரடிகளை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ