உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தாறுமாறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களால் மக்கள் அவதி

தாறுமாறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களால் மக்கள் அவதி

அன்னுார், - அன்னுாரில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பஸ் ஸ்டாண்டில் தினமும் 180க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் சராசரியாக எட்டு முறை வந்து செல்கின்றன.தினமும் பல ஆயிரம் மக்கள் அன்னுார் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நுழையும் இடத்திலும், உள்புறத்திலும் பயணிகளை ஏற்றிச் செல்ல சில ஆட்டோக்கள் நிறுத்தப்படுகிறது.இதுகுறித்து தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'அன்னுார் பஸ் ஸ்டாண்டிற்கு உள்ளே ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், இங்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பஸ்கள் நிறுத்துவதற்கும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து அன்னுார் போலீஸ் ஸ்டேஷனிலும், பேரூராட்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இங்கு நிறுத்தப்படும் ஆட்டோ டிரைவர்கள் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. பெரும் விபரீதம் நடக்கும் முன்பு பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே மட்டும் ஆட்டோக்களை நிறுத்த அறிவுறுத்த வேண்டும்,' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி