உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழை வெள்ளத்தில் மூழ்கிய பாலம்: கயிறு கட்டி பாலத்தை கடந்த மக்கள்

மழை வெள்ளத்தில் மூழ்கிய பாலம்: கயிறு கட்டி பாலத்தை கடந்த மக்கள்

கூடலுார்;கூடலுார் புளியம்பாறை சாலையில் உள்ள பாலம், மழை வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் கயிறு கட்டி பாலத்தை கடந்து சென்றனர்.கூடலூர் பகுதியில், பாடந்துறை, ஆலவயல், மங்குழி, புளியம்பாறை, முதல் மைல் உள்ளிட்ட ஊர்கள் வழியாக செல்லும் ஆறுகளில் ஏற்பட்ட மழை வெள்ளம் விவசாய தோட்டங்கள், குடியிருப்பு மற்றும் சாலைகளில் சூழ்ந்தது. மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.புளியம்பாறை கிராமத்துக்கு செல்லும் சாலையில் உள்ள பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் அதனை கடந்து செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் பாலத்தின் இடையே கயிறை கட்டி மக்கள் பாலத்தை கடந்து செல்ல உதவினர். பாடந்துறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், அங்குள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் குளிரூட்டும் நிலையத்தை சூழ்ந்தது. இதனால், ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். விவசாயத் தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், சூழ்ந்த மலை வெள்ளம் நேற்று முன்தினம் இரவு படிப்படியாக குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை