உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கெங்கரை மது கடையை அகற்ற மக்கள் வலியுறுத்தல்

கெங்கரை மது கடையை அகற்ற மக்கள் வலியுறுத்தல்

கோத்தகிரி, ;'கோத்தகிரி கெங்கரை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கெங்கரை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. 'குடி'மகன்கள் மது அருந்திவிட்டு தொந்தரவு செய்வதுடன், அடிக்கடி தகராறு செய்வதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடை அருகில், அரசு ஆரம்ப பள்ளி, உயர்நிலைப்பள்ளி, ரேஷன் கடை மற்றும் தபால் அலுவலகம் அமைந்துள்ளது. பள்ளி மாணவ, மாணவியர் உட்பட பொதுமக்கள் மதுக்கடையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ரேஷன் பொருட்கள் வாங்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.மக்கள் கூறுகையில், 'பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை