உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வயநாடு மக்களுக்கு புளியம்பாறை கிராம மக்கள் ரூ.71 ஆயிரம் உதவி

வயநாடு மக்களுக்கு புளியம்பாறை கிராம மக்கள் ரூ.71 ஆயிரம் உதவி

கூடலுார்;வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், கூடலுார் புளியம்பாறை கிராம மக்கள், 71 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினர்.கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன பலரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள அப்பகுதி மக்களுக்கு, தமிழகத்தை சேர்ந்த பலரும் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், கூடலுார் புளியம்பாறை கிராம மக்கள், வயநாடு மக்களுக்கு உதவிடும் வகையில், 71 ஆயிரம் ரூபாய் நிதியை சேகரித்தனர். தேவர்சோலை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீராஜா தலைமையில், கிராம மக்கள் வயநாடு மாவட்ட நிர்வாகத்திடம் நிவாரண தொகையை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி