உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வருங்கால தலைமுறைக்காக மரம் நடுங்கள்: மாணவர்களுக்கு ராணுவ கமாண்டன்ட் அறிவுரை

வருங்கால தலைமுறைக்காக மரம் நடுங்கள்: மாணவர்களுக்கு ராணுவ கமாண்டன்ட் அறிவுரை

குன்னுார் : உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வெலிங்டன் ராணுவ தலைமையகம், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர், வெலிங்டன் கன்டோன்மென்ட், கிளீன் குன்னுார் தன்னார்வ அமைப்பு சார்பில், மரம் நடும் விழா நடந்தது. இதில், ராணுவ பகுதியில்உள்ள வெலிங்டன் படகு இல்ல ஏரியை சுற்றி நாவல். விக்கி உட்பட பல்வேறு வகையில், 300 சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.விழாவை வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ் துவக்கி வைத்து பேசுகையில், ''வெலிங்டன் கன்டோன்மென்ட்டில் துப்புரவு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு ராணுவ பகுதிகளை துாய்மையாக வைக்கும் துப்புரவு பணியாளர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் . ''கிளீன் குன்னூர் தன்னார்வ அமைப்பும் துாய்மை பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது பாராட்டுக்குரியது. வருங்கால தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் மரங்களை நடவு செய்வது அனைவரின் கடமை. ''இந்த மரங்களை ராணுவத்தின் சார்பில் பராமரித்து வளர்க்கப்பட்டாலும் மாணவ, மாணவியர் இதனை அவ்வப்போது வந்து கண்காணிக்க வேண்டும். அனைவரும் மரங்களை நட்டு வளர்க்க முன் வர வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, லெய்ட்லா பள்ளி சாரண, சாரணியர் மாணவியர் பேசினர். விழாவில், ஸ்டேஷன் கமாண்டர் ஐயப்பா. கிளீன் குன்னூர் தன்னார்வ அமைப்பின் தலைவர் சமந்தா அயனா. அறங்காவலர் வசந்தன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பல்வேறு தன்னார்வ அமைப்புகள், ராணுவ வீரர்கள் கன்டோன்மென்ட் ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை