மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
குன்னுார்: குன்னுார் ஓட்டுபட்டறை செல்லும் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, 'ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், கோர்ட், தபால் நிலையம் டி.எஸ்.பி., அலுவலகம்,' என, அனைத்து அரசு துறை அதிகாரிகள் சென்று வரும் இந்த சாலையில், பல இடங்களில் ஏற்பட்டுள்ள குழிகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும், நகராட்சி மெத்தனமாக உள்ளது. மேடான இந்த இடத்தில் குழிகளில் வாகனங்களை இறக்கி ஏற்றி செல்ல டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த குழிகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
03-Oct-2025