உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தனியார் பள்ளி பஸ்கள்: அதிகாரிகள் ஆய்வு

தனியார் பள்ளி பஸ்கள்: அதிகாரிகள் ஆய்வு

கூடலுார்:கூடலுாரில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பள்ளி வாகனத்தின் தகுதி சான்று ரத்து செய்யப் பட்டது.தமிழகத்தில் அடுத்த மாதம் பள்ளிகள் துவங்க உள்ள நிலையில், தனியார் பள்ளி வாகனங்களை, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, கூடலுாரில் இயக்கப்படும், 75 தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி, புனித தாமஸ் பள்ளியில் நேற்று நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், ''கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில், ஒரு பள்ளி வாகனத்தின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது. எட்டு பள்ளி வாகனங்கள் சிறிய குறைகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டது.கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், திடீரென ஏற்படும் தீயை பாதுகாப்பாக கட்டுப்படுத்துவது குறித்து, பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'கூடலுாரில், பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக தனியார் பள்ளிகள் மூலம், 90 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று (நேற்று), 75 தனியார் பள்ளி பஸ்களில் ஆவணங்கள், தீயணைப்பு கருவி, முன் மற்றும் பின் கேமரா இயக்கம், முதலுதவி பெட்டி, இருக்கைகள், அவசர கால வழி செயல்பாடுகள் ஓட்டுநர்களின் விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு பஸ் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது. எட்டு பஸ்களிலிருந்து சிறு குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை நிவர்த்தி செய்து, ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை