குடிநீர் கிணற்று நீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுப்பதால் சிக்கல்
குன்னுார்:குன்னுாரில் குடிநீர் கிணற்றிலிருந்து, சுத்திகரிப்பு நிலையத்திற்கு நகராட்சி தண்ணீரை கொண்டு செல்ல குழாய் அமைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குன்னுார் நகராட்சி ஒன்றாவது வார்டு கரடி பள்ளம் பகுதியில், 60 குடும்பங்கள் உள்ளன. கடந்த, 2013ம் ஆண்டு இங்கு கிணறு அமைக்க அப்போதைய அ.தி.மு.க., எம்.பி., அர்ஜுணன் நிதி ஒதுக்கினார். தொடர்ந்து கிணறு அமைக்கப்பட்டு மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.தற்போது, அங்குள்ள கிணறு பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள் சூழ்ந்து கிணறு காணப்படுகிறது. சமீபத்தில் அந்த கிணற்று நீரில், அம்பிகாபுரம் மற்றும் ரப்பர் தொழிற்சாலையின் கழிவுநீர் கலக்காமல் இருக்க மக்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், கிணற்றிலிருந்து, குப்பை குழி சுத்திகரிப்பு நிலைய மையத்திற்கு குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல் நட வடிக்கை எடுக்கப்பட்டது.மக்கள் கூறுகையில்,'இதன் மூலம் அரசின் நிதி வீணடிக்கப்பட்டதாகவும், விசாரணை நடத்தி, கரடி பள்ளத்திற்கு தொடர்ந்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்,' என்றனர்.