ரம்ஜான் நோன்பு தராவியா தொழுகையுடன் துவக்கம்
குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை துவங்கியது.தமிழகமெங்கும், நேற்று முன்தினம் பிறை தென்பட்டதையடுத்து, இஸ்லாமியரின் நோன்பு காலம், 'தராவியா' எனும் சிறப்பு இரவு தொழுகையுடன், ரம்ஜான் நோன்பு துவங்கியது.குன்னுார் பெட்போர்டு பள்ளி வாசலில், முப்தி முஜீபுர் ரஹ்மான் காஸிமி; பெரிய பள்ளிவாசலில் வசீம் அக்ரம் மாஸாஹிரி; சின்ன பள்ளி வாசலில் முப்தி வாசீம் ஹசனி; வெலிங்டன் பள்ளி வாசலில் நிமதுல்லாஹ் தாவூதி; லவ்டேல் பள்ளிவாசலில் சுல்தான் அல்தாபி; அருவங்காடு பள்ளி வாசலில் பைசுதீன் ஆகியோர் தலைமையில் நோன்பு தொழுகை நடந்தது.மேலும், அம்பிகாபுரம் பள்ளி வாசலில் தவ்பீக் தாவூதி; ஓட்டுப்பட்டறை பள்ளி வாசலில் முகமது மலாஹிரி; சேலாஸ் பள்ளி வாசலில் மம்நுான் உலுாமி; கே.எம்.கே., நகர் பள்ளி வாசலில் ஜாஹாங்கீர் உலுாமி; கட்டபெட்டு பள்ளி வாசலில் தவ்பீக் உலுாமி ஆகியோர் தலைமையில், ரம்ஜான் நோன்பு தொழுகைகள் நடந்தன. ஒரு மாத காலத்திற்கு சிறப்பு தொழுகையும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் நடந்தது. இதேபோல, ஊட்டி, கூடலுார், கோத்தகிரி பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகளுடன் ரமலான் நோன்பு துவங்கி நடந்து வருகிறது.