உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானை தாக்கி உயிரிழந்த மூதாட்டி குடும்பத்துக்கு நிவாரணம்

யானை தாக்கி உயிரிழந்த மூதாட்டி குடும்பத்துக்கு நிவாரணம்

பந்தலுார்:பந்தலுார் அருகே, யானை தாக்கி உயிரிழந்த மூதாட்டி குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.பந்தலுார் அருகே தட்டாம்பாறை, முருக்கம்பாடி, வட்டக்கொல்லி சுற்றுவட்டார பகுதிகளில் நாள்தோறும் யானைகள் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 6:00- மணிக்கு வட்டக்கொல்லி பகுதியில், நாகம்மாள்,65, என்பவர் வீட்டு வாசலில் நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை, நாகம்மாளை தாக்கியுள்ளது.அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து, யானையை துரத்தி நாகம்மாளை மீட்டு, பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வனவர் ஜார்ஜ்பிரவீன்சன், வி.ஏ.ஓ., கர்ணன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.நேற்று காலை நாகம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறை மூலம் நாகம்மாளின் வாரிசுகளான சந்திரா, ஜெயலட்சுமி இருவருக்கும் தலா, 25 ஆயிரம் வீதம், 50 ஆயிரம் ரூபாய் பணம்; 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருவருக்கும் பிரித்து காசோலையாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், வருவாய்த்துறை, வனத்துறையினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ