உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரயில் நிலையத்தில் பில்லர் இல்லாமல் தடுப்பு சுவர் பணி; ஆலோசனை குழு கூட்டத்தில் புகார்

ரயில் நிலையத்தில் பில்லர் இல்லாமல் தடுப்பு சுவர் பணி; ஆலோசனை குழு கூட்டத்தில் புகார்

குன்னுார் : குன்னுார் ரயில் நிலையத்தில் பில்லர் இல்லாமல் தடுப்புச்சுவர் அமைக்கப்படுவதாக புகார் எழுப்பப்பட்டுள்ளது. குன்னுார் மலை ரயில் நிலையத்தில், ரயில்வே கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை குழு கூட்டம் நேற்று நடந்தது. தென்னக ரயில்வே கோவை அலுவலக முதன்மை வணிக பொது மேலாளர் சந்தீப், என்.எம்.ஆர்., அலுவலர் முருகேசன், நிலைய அலுவலர்கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ரயில் நிலையங்களின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் முன் வைத்த கோரிக்கை விபரம்:வைஷாலி : கேத்தி ரயில் நிலையம் அருகே சாலையில் கேட் நீண்ட நேரம் பூட்டப்படுவதால் வாகனங்கள் செல்லவும், ஆம்புலன்ஸ் செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. பிரசாத்: வெலிங்டன் பகுதியில் கேட் பூட்டப்படும் போது ராணுவ வாகனங்கள் செல்ல தாமதம் ஏற்படுகிறது. பாப்பண்ணன்: குன்னுார் லெவல் கிராசிங் கேட் காலை நேரங்களில் பூட்டப்படுவதால் பள்ளி கல்லுாரி மாணவிகள் செல்லவும், ஆம்புலன்ஸ் செல்லவும் தாமதமாகிறது. குறிப்பிட்ட இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.ஈஸ்வரன்: பாரம்பரியமிக்க மலை ரயிலை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்படும் தடுப்புச் சுவர் பணியில் சில இடங்களில் பில்லர் அமைக்காமலும், தரம் இல்லாமலும் பணிகள் நடக்கிறது. இந்த புகார்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, வருங்காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையிலான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். பாரம்பரியமிக்க மலை ரயில் நிலையத்தில் இருந்து அகற்றப்பட்ட தேக்கு மர சாரங்கள் குறித்த விபர அறிக்கையை பதிவு செய்து அதனை மீண்டும் பயன்படுத்த வேண்டும். நூற்றாண்டுகள் கடந்த மரத்தை வெட்டாமல், சுற்றிலும் பாதுகாப்பு தடுப்பு பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதிகாரிகள் கூறுகையில், 'உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உயர் அதிகாரிகளிடம் பரிந்துரைக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை