மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
20 hour(s) ago
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கூடலுார் : கூடலுார், ஓவேலி சாலை, சின்னசூண்டி சந்திப்பில் இருந்து, காந்திநகர் பகுதிக்கு இணைப்பு சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையை காந்திநகர், பல்மாடி, ஆத்துார், சாண்டில்ஸ், சப்போக் பகுதி மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். கூடலுாரில் இருந்து காந்திநகருக்கு அரசு பஸ் இயக்கி வருகின்றனர்.இச்சாலையின் குறுக்கே, மழைநீர் வழிந்தோட, கருங்கற்களை கொண்டு வடிநீர் கால்வாய் அமைத்துள்ளனர். பழமையான கால்வாய் தற்போது சேதமடைந்து பலமிழந்து வருகிறது. அப்பகுதி சாலையின் இருபுறமும், தடுப்புகள் இன்றி விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.தற்போது, தொடர்ந்து பெய்து வரும் மழையில், சாலை குறிக்க உள்ள கால்வாய் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கும் ஆபத்து உள்ளது. மக்கள் கூறுகையில், 'இச்சாலையில் மழைநீர் செல்ல ஆங்கிலேயர் காலத்தில் சாலை குறுக்கே அமைக்கப்பட்ட வடிகால்வாய் சேதமடைந்து, போக்குவரத்து துண்டிக்கும் ஆபத்து உள்ளது. இதனை சீரமைத்து சாலையின் இரு புறமும் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும்,' என்றனர்.
20 hour(s) ago
03-Oct-2025