உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குப்பை கொட்டுவதால் தொற்று பரவும் அபாயம்

குப்பை கொட்டுவதால் தொற்று பரவும் அபாயம்

பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் மின்மயானம் பின்புறம் குப்பைகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.கவுண்டம்பாளையம் அசோக் நகர் செல்லும் வழியில் மின் மயானம் உள்ளது. இங்கு இறந்தவர்களின் உடலை எரிக்க கொண்டு வரும் நபர்கள், இறந்தவர்களின் உடை, படுக்கை உள்ளிட்டவைகளை மின் மயானம் பின்புறம் வீசி சென்று விடுகின்றனர். இப்பகுதியில் சில நாட்களாக பெய்து வரும் மழையால், இக்குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,' மின் மயானம் பின்புறம் கொட்டப்படும் குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அகற்ற வேண்டும். இது குறித்து பலமுறை தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. குப்பைகளை உடனடியாக அகற்றி தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி