உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாநில எல்லையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஆறுகள்

மாநில எல்லையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஆறுகள்

பந்தலுார்; பந்தலுார் பகுதியில் இரு மாநில எல்லையில் ஓடும் பல்வேறு ஆறுகள் பயணிகளை கவர்ந்து வருகின்றன.பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு தென்படாத பல பகுதிகள் உள்ளன. அதில், தமிழக எல்லை பகுதியான சேரம்பாடி, சுற்று வட்டாரங்களில் பசுமையான வனம் மற்றும் வனத்திற்கு மத்தியில் பாயும் ஆறுகள் மற்றும் நீரோடைகள் என கண்களுக்கு விருந்தளிக்கும் இடங்கள் அதிக அளவில் உள்ளது. மேலும், தாளூர் மற்றும் சாமியார் மலை பகுதிகளில் உற்பத்தியாகும் சிறுநீரோடைகள், சோலாடி பகுதியில் இணைந்து ஆறாக உருவெடுக்கிறது. இந்த ஆற்றில் வற்றாத தண்ணீர் ஓடினாலும், அதனால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை.இந்த ஆறு, கேரளா மாநிலம் நிலம்பூர் பகுதியில் சாலியாற்றில் கலந்து, அரபிக் கடலை நோக்கி பாய்கிறது. இந்த ஆறு பாயும் பகுதி பாறைகள் மற்றும் வனங்கள், தேயிலை தோட்டம் என அழகாக காட்சி தருகிறது. கேரள எல்லையில் உள்ள, இங்குள்ள விடுதிகளுக்கு திரளான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.அதே வேளையில், தமிழக எல்லை வழியாக இந்த பகுதிகளுக்கு செல்ல தடை உள்ளதால், தமிழகம் வரும் சுற்றுலா பயணிகள் இதுபோன்ற இடங்களை பார்த்து ரசிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட சுற்றுலாத்துறை இதுபோன்ற இடங்களை தேர்வு செய்து, சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் சென்று வர நடவடிக்கை எடுத்தால், சுற்றுலா மேம்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை