உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / டால்பின் நோஸ் காட்சி முனையில் பார்க்கிங் வசூலில் கொள்ளை

டால்பின் நோஸ் காட்சி முனையில் பார்க்கிங் வசூலில் கொள்ளை

குன்னுார்;குன்னுார், டால்பின்நோஸ் காட்சிமுனைக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு 'பார்க்கிங்' வசூலில் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.குன்னுார் லேம்ஸ்ராக் காட்சி முனை, டால்பின் நோஸ் காப்பு வனப்பகுதியில் உள்ளது. இங்கிருந்து பார்க்கும் போது, மேட்டுப்பாளையம் சமவெளி பகுதியில், மலைகளை தவழ்ந்து செல்லும் மேககூட்டம் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது.இயற்கை சுற்றுலா வரை படத்தில் முக்கிய இடம் வகிக்கும் இந்த பகுதிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு, செல்லும் வாகனங்களுக்கு பர்லியார் ஊராட்சி சார்பில், டெண்டர் விடப்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு பர்லியார் ஊராட்சி சார்பில், கட்டணம் நிர்ணயம் செய்து, நான்கு சக்கர வாகனங்களுக்கு, 20 ரூபாய், இருசக்கர வாகனங்களுக்கு, 10 ரூபாய், மேக்சி கேப் வாகனங்களுக்கு, 30 ரூபாய் வசூலித்தது. தற்போது, தனியாருக்கு ஓராண்டிற்கு, 15 லட்சம் ரூபாய் டெண்டர் விடப்பட்டு, 20, 30, 50 ரூபாய் என முறையே வசூலிக்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், நான்கு சக்கர வாகனங்களுக்கு, 70 ரூபாய், மேக்சி கேப் வாகனங்களுக்கு, 120 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம், 100 வாகனங்கள் வந்தால், 7,000 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மாதம், 3 லட்சம் ரூபாய் வரை வசூலிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுற்றுலா டிரைவர்கள் கூறுகையில், 'இதுவரை இல்லாத அளவு பார்க்கிங் கட்டண கொள்ளை நடந்து வருகிறது. இது தொடர்பாக எங்கு புகார் கொடுப்பது என்ற அறிவிப்பு பலகைகள் கூட வைப்பதில்லை. தட்டி கேட்டால் இங்குள்ளவர்கள் மிரட்டுகின்றனர். போலீசாரும் இவர்களுக்கு உடந்தையாக உள்ளனர். இதனால் இங்கு அடுத்த முறை சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்கும் வாய்ப்பு உள்ளது,' என்றனர்.பர்லியார் ஊராட்சி தலைவர் சுசீலா கூறுகையில்,''டெண்டர் எடுத்தவருக்கும் இங்குள்ள கடைக்காரர்களுக்கும் பிரச்னை உள்ள நிலையில், வசூல் செய்வதற்கு நான் தான் காரணம் என கூறி வருகின்றனர். இது தொடர்பான புகார்கள் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை