| ADDED : ஜூலை 09, 2024 01:34 AM
கூடலுார்:கூடலுார் புளியம்பாறை அரசு உயர் நிலைப்பள்ளியில் நடந்த, சமூக தணிக்கை வார்டு சபை கூட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.கூடலுார் புளியம்பாறை அரசு உயர் நிலைப்பள்ளியில், கடந்த கல்வி ஆண்டில் சத்துணவு திட்டம் குறித்த சமூக தணிக்கை பணிகள் நடந்தது. கோவை வட்டார வள அலுவலர் பிரான்சஸ் சேவியர் மற்றும் உள்ளூர் குழுவினர் யோகேஸ்வரி, பிரியா, புஷ்பா, சத்தியவாணி, கோமதி ஆகியோர் பங்கேற்றனர். அதில், சத்துணவு பதிவேடுகள், மதிய உணவின் தரம், மாணவர்களின் சுகாதாரம், சத்துணவு குறித்து ஆய்வு செய்ததுடன், சத்துணவு தரத்தை மேம்படுத்துவது குறித்து பெற்றோர் கருத்துக்களை கேட்டுறிந்தனர்.இதன் தொடர்ச்சியாக, பள்ளியில் சமூக தணிக்கை வார்டு சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கவிதா தலைமை வகித்தார். தணிக்கை குறித்த விபரங்கள் குழுவினர் சமர்ப்பித்தனர்.தொடந்து, 'காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; மாணவர்கள் உணவு உண்ண சத்துணவு கூடம் அமைப்பது' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர் புவனேஸ்வரன், தேவர்சோலை பேரூராட்சி கவுன்சிலர் பொன்னி, ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.