உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்துக்கு தீர்வு

குன்னுாரில் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்துக்கு தீர்வு

குன்னுார்:குன்னுார் பாரஸ்ட்டேல் பகுதியில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்தது தொடர்பாக, 'தினமலர்' செய்தி எதிரொலியாக உடனடியாக சீரமைக்கப்பட்டது.குன்னுார் பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரஸ்ட்டேல் பகுதியில் அமைக்கப்பட்ட கால்வாயில் குடிநீர் குழாயும் உள்ளது.இந்த கால்வாயில் கழிவுநீர் ஓடியதால் குடிநீரில் லேசாக கலந்தது. இதனால், முதியவர் ஒருவருக்கு நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, இப்பகுதி மக்கள், மாவட்ட கலெக்டர் உட்பட உள்ளூர் அலுவலர்களுக்கு புகார் மனுக்களை அனுப்பியும் தீர்வுகிடைக்கவில்லை. இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சீரமைக்கப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.குன்னுார் பஞ்சாயத்து யூனியன் பி.டி.ஓ., அன்பரசு கூறுகையில், ''குறிப்பிட்ட இடத்தில் கழிவு நீர் தேங்குமிடம் சீரமைக்கப்பட்டது. தேர்தல் முடிவு வெளியான பிறகு தனியாக கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு நிரந்தர தீர்வு கிடைக்கும். இப்பகுதி மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம்,'' என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை