மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
20 hour(s) ago
ஊட்டி : ஊட்டி அருகே வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.ஊட்டி அருகே கப்பத்தொரை பகுதியில் ஒரு வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக ரூரல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அங்கு மறைத்து வைத்திருந்து, 91 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், சரசு, 57, என்ற பெண் டாஸ்மாக் மது வகைகளை வீட்டில் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக ஏற்கனவே வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
20 hour(s) ago