உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தாய் பெயரில் மாணவர் மரம் நடும் நிகழ்வு ஆக., 31 வரை செயல்படுத்த முடிவு

தாய் பெயரில் மாணவர் மரம் நடும் நிகழ்வு ஆக., 31 வரை செயல்படுத்த முடிவு

ஊட்டி:மத்திய சுற்றுச்சூழல் துறை கால நிலை மாற்றம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில், மாணவரின் தாய் பெயரில் மரம் நடும் நிகழ்வு துவக்கப்பட்டது.புவி வெப்பமாவதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. 'மாற்று எரிசக்தி கார்பன் அளவை குறைத்தல்; பசுமை சூழல் அதிகரிக்கும் திட்டங்கள்,' என, நாடு முழுவதும் காலநிலை சூழ்நிலைக்கு ஏற்றவாறு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர், 'அனைத்து மாணவர்களும், தன் தாயாரின் கடமையின் நன்றி உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக, தாயின் பெயரில் ஒரு மரக்கன்றை நட வேண்டும்,' என, கோரிக்கை விடுத்திருந்தார்.நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் குறைந்தது, 35 மரங்களை பள்ளி வளாகங்கள், வீடுகள், பொது இடங்கள், புனித ஸ்தலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதில், நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சோலை மரங்கள், பழ நாற்றுகள் நடுவதற்கான காரணங்களை விளக்கி, பல்வேறு பள்ளிகளில் மரங்கள் நடும் பணியை செயல்படுத்தி வருகிறது.இதுவரை, ஊட்டி பிங்கர் போஸ்ட் புனித தெரேசனை உயர்நிலைப்பள்ளி, காந்தள் ஓம்பிரகாஷ் ஆரம்பப்பள்ளி, ஊட்டி சி.எஸ்.ஐ., ஹோபார்ட் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் அவர்களின் தாயாரின் பெயரில் மரங்கள் நடவு செய்தனர். மரக்கன்றுகள் நடப்பட்டதன் முழுமையான தகவல்கள் மத்திய சுறுச்சுழல் துறையின் இணைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதில், 'பள்ளியின் பெயர், மரக்கன்றுகள் நடவு செய்த மாணவியின் பெயர், தாயாரின் பெயர், நேரம்,' என, அனைத்து குறிப்புகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் தாயாரின் பெயரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு, ஆக., 31ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி