மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கூடலுார் : கூடலுார் அரசு மருத்துவமனையில் பெண்கள், உள்நோயாளி பிரிவு கட்டடத்தில் ஏற்பட்ட, விரிசல் மற்றும் மழைநீர் கசிவால் உடனடியாக மூடப்பட்டது.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் உள்ள கட்டடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். ஆய்வில், பெண்கள் உள்நோயாளி பிரிவு செயல்பட்டு வரும், நுாற்றாண்டு பழமையான கட்டடத்தின் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டு, நீர்கசிந்தது தெரிய வந்தது. அந்த கட்டடதை மூட அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.இதை தொடர்ந்து, பெண்கள் உள்நோயாளி பிரிவு கட்டடத்தை நேற்று அதிகாரிகள் மூடினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த, 13 நோயாளிகளை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்தனர். அதில், 10 நோயாளிகள், தங்கள் விருப்பத்தின் பேரில் வீட்டுக்கு சென்றனர். ஒருவர் கேரள தனியார் மருத்துவ மனைக்கு சென்றார். மீதமுள்ள இரண்டு நோயாளிகளை மருத்துவமனையில் வேறு பகுதியில் உள்நோயாளியாக அனுமதித்தனர். அதன்பின், பெண்கள், உள்நோயாளி கட்டடங்களை அதிகாரிகள் மூடினர்.
03-Oct-2025