உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

கூடலுார்;தமிழக ஆசிரியர் கூட்டணி, கூடலுார் வட்டக்கிளை சார்பில் முப்பெரும் விழா நடந்தது. மகளிர் அணி மாவட்ட செயலாளர் நிர்மலாதேவி வரவேற்றார். வட்டார தலைவர் பாபு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் மதியழகன் ஆண்டு அறிக்கையும், பொருளாளர் நீலேஷ் வரவு - செலவு அறிக்கை சமர்பித்தனர்.மாவட்ட செயலாளர் முருகேஷ், பொருளாளர் பிரசாத், துணை தலைவர் முகமது அலி, மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் மல்லேசன், மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்று, சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: அரசாணை, 243ஐ ரத்து செய்ய வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும்; கூடலுார் ஒன்றியத்தின் வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களைநிரப்ப வேண்டும்,' என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பணி ஓய்வு பெற்ற பள்ளிதலைமை ஆசிரியர் கோமதி, இடைநிலை ஆசிரியர்கள் வனிதா லட்சுமி (தெய்வமலை), ராணி (காமராஜர்நகர்), பாப்பா (காமராஜ்நகர்) ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. 'தமிழக கனவு ஆசிரியர்' பரிசு பெற்ற பாட்டவயல் பள்ளி ஆசிரியர் ஷீபாவை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். வட்டார மகளிர் அணி செயலாளர் சப்னா பிரீத்தா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி