உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வேட்டை தடுப்பு காவலரை தாக்கிய கரடியால் பரபரப்பு

வேட்டை தடுப்பு காவலரை தாக்கிய கரடியால் பரபரப்பு

குன்னுார்:குன்னுார் கரிமொரா ஹட்டியில் நள்ளிரவில் வாகன ரோந்து பணியில் ஈடுபட்ட வேட்டை தடுப்பு காவலரை கரடி தாக்கியதில் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.குன்னுார் கரிமொரா ஹட்டி, கரோலினா சுற்றுப்புற பகுதிகளில் கரடிகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால், இரவு நேரங்களில் குன்னுார் வனத்துறை சார்பில் வாகனத்தில் ரோந்து சென்று கண்காணிப்பு பணி நடக்கிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, கரிமொராஹட்டி சாலையில் முன்புறம் சென்று கொண்டிருந்த கரடியை, வன ஊழியர்கள் விரட்டினர். அப்போது வாகனத்தின் பின்புறமாக வந்த கரடி ஒன்று, வாகனத்தில் இருந்த வேட்டை தடுப்பு காவலர் அய்யப்பனின் கையை தாக்கியதில் காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்புமின்றி தப்பினார். தொடர்ந்து, ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை