| ADDED : மே 23, 2024 04:56 AM
ஊட்டி : ஊட்டி அருகே நீரோடையில் இறந்த கிடந்த காட்டெருமை குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேத்தி பாலாடா பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் நீர் நிலைகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று பாலாடா நீரோடையில் காட்டெருமை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். குந்தா ரேஞ்சர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின், காட்டெருமை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அந்த பகுதியில் புதைக்கப்பட்டது. ரேஞ்சர் சீனிவாசன் கூறுகையில்,''காட்டெருமை நீரோடையில் தவறி விழுந்துள்ளது. அடி பலமாக பட்டதால் தண்ணீரில் இருந்து எழுந்திருக்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளது. எனினும், பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்பு முழு விவரம் தெரிய வரும்,'' என்றார்.