உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குப்பை கையாளும் திறன் அதிகப்படுத்த திட்டம் அவசியம்

குப்பை கையாளும் திறன் அதிகப்படுத்த திட்டம் அவசியம்

குன்னுார்;'வருங்கால வளர்ச்சிக்கு ஏற்ப குப்பை கையாளும் திறனை அதிகப்படுத்த திட்டமிட வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் நகராட்சிக்கு சொந்தமான, 11.10 ஏக்கர் பரப்பளவில் உரக்கிடங்கு உள்ளது. 'கிளீன் குன்னூர்' அமைப்பு சார்பில் இப்பகுதி பூங்காவாகவும் மாற்றப்பட்டது. மேலும், இங்கு வளமீட்பு மையம் உருவாக்கி, திடக்கழிவு மேலாண்மை பணி, மட்கும் கழிவுகள் பதப்படுத்தும் மையத்தில், குப்பைகளை கொண்டு, உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.நாள் ஒன்றுக்கு, 8 டன் வரை தயார் செய்யப்படுகிறது. 'கூலாக்குதல், காற்று நுழைவு வரிசை, ஜல்லடையில் பிரித்தெடுத்தல்,' என, மூன்று பிரிவுகளில் குப்பை மட்டுமின்றி இறைச்சி, நார் கழிவுகள் உரம் தயாரிக்கப்படுகிறது.இங்கு தயாரிக்கும் உரம் வேளாண்மை பல்கலை கழகத்தின் தர பரிசோதனை செய்து, தோட்டக்கலைத்துறை மற்றும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மையத்தை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு மேற்கொண்டார்.அவர் கூறுகையில், 'குப்பை மேலாண்மை திட்டம் இது போன்று கையாள்வது ஒரு நல்ல முயற்சி. இங்குள்ள தொழிலாளர்கள் அக்கறை மற்றும் ஆர்வத்துடன் பணியாற்றுகின்றனர். நகராட்சியின் ஒத்துழைப்புடன் இந்த அமைப்பினர் பணிபுரிகின்றனர்.வருங்கால வளர்ச்சிக்கு ஏற்ப குப்பை கையாளும் திறனை அதிகப்படுத்த திட்டமிட வேண்டும்,' என்றனர். குன்னுார் வருவாய் ஆர்.டி.ஓ., சதீஷ், நகராட்சி கமிஷனர் சசிகலா, கிளீன் குன்னுார் அமைப்பு தலைவர் சமந்தாஅயனா, தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ