உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாவட்ட ஹாக்கி போட்டியில் மாணவ, மாணவியர் அசத்தல்

மாவட்ட ஹாக்கி போட்டியில் மாணவ, மாணவியர் அசத்தல்

குன்னுார் : குன்னுாரில் நடந்த மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில், அறிஞர் அண்ணா பள்ளி, சாந்தி விஜய் பள்ளி, சாம்ராஜ் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை புரிந்தனர்.நீலகிரி மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில், குன்னுார் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது. 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இறுதி போட்டிகளில், மாணவர்களில், 14 வயது, 19 வயது பிரிவுகளில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி; 17 வயது பிரிவில் அருவங்காடு டெம்ஸ் பள்ளி; மாணவியரில், 14, 19 வயது பிரிவுகளில் குன்னுார் சாந்தி விஜய் பள்ளி; 17 வயது பிரிவில் சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது.முன்னதாக, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பெரியசாமி போட்டியை துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள், குணசுந்தரி, தேவராஜ், செந்தில், உஷா ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஹாக்கி நீலகிரிஸ் அமைப்பு பொருளாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி